இந்தோனேஷிய, சுமத்ராவில் சற்று முன்னர் சக்தி வாய்ந்த நில நடுக்கம் உணரப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ரிச்டர் அளவில் இது 7.9 ஆகப் பதியப்பட்டுள்ளது. எனினும் இதன் விளைவாக இலங்கைக்கு எதுவித பாதிப்பும் இல்லையென வளி மண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது.
மலேஷியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் இந்த நில நடுக்கம் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நில நடுக்கத்தை அடுத்து கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. சேத விவரங்கள் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
அமெரிக்க சமாவோ தீவில் இன்று காலை ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தில் 100 பேர் பலியானது தெரிந்ததே.