மத வழிபாட்டுத் தலங்களில் மேற்கொள்ளப்படும் நிர்மாணப் பணிகளுக்கு குறைந்த விலையில் சீமெந்தை விநியோகிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மதத்தலங்களுக்கு குறைந்த விலையில் சீமெந்தை வழங்கும் திட்டம் அரசாங்க கட்டடப் பொருள் கூட்டுத்தாபனத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இந்த திட்டத்தின் கீழ்; வணக்கஸ்தலங்களுக்குத் தேவையான 50 கிலோ கிராம் சீமெந்துப் பொதி ஒன்றை சந்தை விலையினை விட 120 ரூபா குறைவாகப் பெற்றுக்கொள்ள முடியும். குறைந்தது 50 பொதிகளைக் கொள்வனவு செய்தாலே இச்சலுகை வழங்கப்படும். இந்தச் சலுகையைப் பெற விரும்பும் வணக்கஸ்தலங்களின் நிர்வாகிகள் தமது விண்ணப்பங்களை கட்டடப் பொருள் கூட்டுத்தாபனத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிட்டார்.