பசிபிக் பெருங்கடலில் உள்ள சமோவோ மற்றும் அமெரிக்கன் சமோவோ ஆகிய தீவுகளில் ஏற்பட்ட சுனாமியால் 100 பேர் பலியானார்கள். பசிபிக் பெருங்கடலில் உள்ள சமோவா தீவுக் கூட்டமே இந்தத் தாக்கத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. இதில் சமோவா என்ற நாடும் அமெரிக்காவுக்குச் சொந்தமான அமெரிக்கன் சமோவா என்ற தீவும் அடங்குகின்றன்
இவற்றின் சில பகுதிகளில் நேற்று 8 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கடல் கொந்தளித்து சுனாமி வந்ததால், நிலப்பரப்புக்குள் கடல் நீர் புகுந்தது. கடற்கரையோர விடுதிகளில் நீர் புகுந்ததில் 100 பேர் பலியானதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு மீட்புப் பணிகளுக்கு உதவ அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முன்வந்திருக்கின்றன.