இவ்வருட இறுதிக்குள்; தாண்டிக்குளத்தில் இருந்து முகமாலை வரையான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது. யாழ்தேவி ரயில் சேவையை காங்கேசன்துறை வரை விஸ்தரிக்கும் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
தாண்டிக்குளத்தில் இருந்து காங்கேசன்துறை வரையுள்ள 27 ரயில் நிலையங்களையும் நிர்மாணிக்கும் பொறுப்புகளை 27 உள்நாட்டு வெளிநாட்டு அனுசரணையாளர்கள் ஏற்றுள்ளனர். அதன்படி காங்கேசன்துறை வரையான ரயில் நிலையங்களை மீளமைக்கும் பணிகள் 27 உள்நாட்டு வெளி நாட்டு நிறுவனங்களுக்கு இன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படுகின்றது.
போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெருமா இன்று உத்தியோகபூர்வமாக இதனைக் கையளிக்கின்றார்