கனகராயன்குளம் மற்றும் மாங்குளத்தில் பொலிஸ் திணைக்களத்தின் புதிய கட்டடங்கள் இரண்டு திறந்து வைக்கப்பட்டன. இதன் ஓர் அங்கமாக கனகராயன்குளத்தில் புதிய பொலிஸ் நிலையத்தை பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ண ஞாயிறன்று திறந்து வைத்தார்.
இதேவேளை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் ஒன்றையும் அவர் வைபவரீதியாக மாங்குளத்தில் திறந்து வைத்தார்.