இந்தி யாவில் நடைபெற்றுவரும் 23 ஆவது ஆசிய மகளிர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை விளையாடிய கடைசி லீக் ஆட்டத்திலும் தோல்வி அடைந்து வெளியேறியது.
சென்னையில் நடைபெற்றுவரும் இந்த போட்டியில் இலங்கை மகளிர் கூடைப்பந்து அணி நேற்றைய தினம் பிலிப்பைன்ஸ் அணியை சந்தித்தது. இதில் தொடர்ந்தும் சோபிக்கத் தவறிய இலங்கை அணி 5570 என்ற புள்ளிகள் அடிப்படையில் தோல்வி அடைந்தது. இலங்கை அணி சார்பாக பிரெமிலா பேருவலகே மற்றும் இனோகா ஜுவான் ஆகியோர் அதிகபட்சமாக தலா 12 புள்ளிகளைப் பெற்றனர்.
இதன்மூலம் இலங்கை அணி இம்முறை ஆசிய மகளிர் கூடைப்பந்து போட்டியில் விளையாடிய 5 லீக் ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்து தொடரில் இருந்து வெளியேறியது. “பி’ பிரி வில் விளையாடிய இலங்கை அணி இதற்கு முன்னர் மலேசியா (4581), கஸகஸ்தான் (4094), லிபியா (5496) மற்றும் உஸ்பெகிஸ்தான் (4889) அணிகளுடனான போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது.
இதன்படி 12 நாடுகள் பங்கேற்றுள்ள இம்முறை ஆசிய மகளிர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணி கடைசி இடத்தை பிடித்தது.