திருகோணமலை மாவட்ட குச்சவெளிப் பிரதேசத்தில் திரியாய் நீலப்பணிக்கன் குளம் நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் 25 வருடங்களின் பின்னர் வேளாண்மைச் செய்கையை ஆரம்பிக்கும் வகையில் நேற்று ஏர்பூட்டு விழா நடைபெற்றது.
எதிர்வரும் பெரும்போகச் செய்கையை ஆரம்பிக்கும் வகையில் மாகாண விவசாய அமைச்சர் ஏற்பாடு செய்த இந்த ஏர்பூட்டு விழாவில் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், மாகாண அமைச்சர்களான துரையப்பா நவரட்ணராஜா, எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் மத்திய தேச நிர்மாண அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே உட்பட மாகாண விவசாய திணைக்கள அதிகாரிகளும் விவசாயிகளும் கலந்து கொண்டனர்
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் முயற்சி காரணமாக இப்பிரதேசத்தில் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவதற்கு பாதுகாப்பு தரப்பினரின் அனுமதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. நீலப்பணிக்கன் குளமும் புனரமைப்பு செய்யப்பட்டு நீர்ப்பாசன வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன.
பயிர்ச் செய்கையில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் உரமும் விதை நெல்லும் வழங்கப்பட்டன.