தேங்காய் உரி மட்டைகள் மற்றும் சிரட்டைகளை நாடளாவிய ரீதியில் கொள்வனவு செய்யும் திட்டம் ஒன்றை பெரும் தோட்டக் கைத்தொழில் அமைச்சு ஆரம்பித்துள்ளது.
இந்தப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நாடளாவிய ரீதியில் 1500 பிரதிநிதிகளை நியமிக்க அமைச்சசு நடவடிக்கை எடுத்துள்ளதுடன் முதற்கட்டமாக 800 பிரதிநிதிகளை நியமித்துள்ளது.
தெங்கு சார்ந்த இடைப்பட்ட உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்யம் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இந்தத் திட்டம் தெங்கு அபிவிரத்தி அதிகார சபை மூலம் முன் எடுக்கப்படுவதுடன் இதற்கான ஆலோசனைகளை வழங்குவதடன் போக்குவரத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.