இலங் கையில் அண்மைய யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் இடம்பெயர நேர்ந்த மக்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளது போன்றதொரு சூழலில் இருந்துவருகிறார்கள் என்று ஐ.நா.மன்ற மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் நவநீதிம் பிள்ளை தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் மன்றக் கூட்டத்தில் நவநீதம் பிள்ளை ஆற்றவுள்ள உரை என ஊடகங்களிடம் வழங்கப்பட்டுள்ள தகவல்களில் இவ்விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு எண்ணிக்கையில் மக்கள் முகாம்களில் தொடர்ந்தும் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும், இந்த முகாம்களில் உதவியமைப்புகள் சென்று பணியாற்றுவதில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அங்கே நடைபெறுகின்ற மனிதாபிமானப் பணிகளுக்கு அச்சுறுத்தலாய் அமைந்துள்ளன என்றும் நவநீதம் பிள்ளையின் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.