அரசியலுக்கும் பணத்திற்கும் ஏமாந்து தாய்நாட்டை காட்டி கொடுக்க வேண்டாம் -ஜனாதிபதி வேண்டுகோள்

mahinda-rajapaksha.jpgஅரசியல் நிகழ்ச்சித் திட்டங்களுக்கும், பணத்திற்கும் ஏமாந்து தாய்நாட்டைக் காட்டிக் கொடுக்க வேண்டாமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் (11ம் திகதி) காலியில் வேண்டுகோள் விடுத்தார்.

பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்துக்கட்டும் நோக்கில் மனிதாபிமான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போதும், பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் கூட தாயகத்திற்கு எதிராக பலவகைகளிலும் சூழ்ச்சிகள் இடம்பெறுவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் நாட்டுக்கு எதிராக இடம்பெறுகின்ற சூழ்ச்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக இந்த மண்ணில் பிறந்து, வளர்ந்த ஒருசிலர் தகவல்களைத் திரட்டி நாட்டைக் காட்டிக் கொடுக்க முயற்சி செய்கின்றார்கள். பெற்றுள்ள வெற்றியைப் பேணிப் பாதுகாப்பதென்பது பெரும் சிரமமான காரியம் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறினார்.

காலி, யட்டகல ரஜமகா விகாரை வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற் கண்டவாறு குறிப்பிட்டார். மெட்டரம்ப ஹேமரத்ன தேரருக்கு சங்க நாயக்கர் பதவி வழங்கும் வைபவமும், ‘புனருதய’ கலை விழா – 2009 நிகழ்வும் யட்டகல ரஜமகா விகாரை வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இவ்வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொட ர்ந்தும் உரையாற்றுகையில் :- மனிதாபிமான நடவடிக்கை மூலம் பயங்கரவாதம் முழு மையாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை எந்தவொரு இனத்திற்கும், மதத்திற்கும் எதிராக முன் னெடுக்கப்பட்டதல்ல. மாறாக புலிப் பயங்கரவாதத்திற்கு எதிராகவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதன் பயனாக சகல தரப்பினரதும் ஒத்துழைப்புடன் பயங்கரவா தம் குறுகிய காலத்தில் முழுமையாக ஒழிக்கப்பட்டு நாட்டுக்கு வெற்றி பெற்றுக் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

தாயகத்திற்கு இந்த வெற்றியைப் பெற்றுக் கொடுப்பதற் காக படைவீரர்கள் 26 ஆயிரம் பேர் தங்களது உயிர்களை அர்ப்பணித்தார்கள்.

இவ்வாறு பாரிய அர்ப்பணிப்புடன் அடையப் பெற்றி ருக்கும் இவ்வெற்றியை அரசியல் லாபம் பெறுவதற்காக குறைத்து மதிப்பிட வேண்டாம். பயங்கரவாதம் ஒழித்துக் கட்டப்பட்டு நாடு ஐக்கியப் படுத்தப்பட்டுள்ளது. நாட்டைத் துண்டாட இடமளிக்க முடியாது.

பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப் பட்டிருக் கும் நாட்டை இன, மத, கட்சி, மொழி, நிற பேதங் களுக்கு அப்பால் ஒன்றுபட்டு பாதுகாக்க வேண் டும். இது சகலரதும் பொறுப்பாகும்.

புலிப் பயங்கரவாதத்திற்கு எதிராக மனிதாபிமான இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போதும், அதன் பின்னரும் எமது தாயகத்திற்கு எதிராகச் சூழ்ச்சிகள் முன் னெடுக்கப்படுகின்றன. அற்ப அரசியல் லாபம் பெற்றுக் கொள்ளுவதற்காக சிலர் நாட்டைக் காட்டிக்கொடுக்க முய ற்சி செய்கின்றனர். ஆனால், நாம் அரசியல் செய்வதற்கு நாடு இருக்க வேண்டும் என்பதை இவர்கள் முதலில் உணர்ந்துகொள்வது அவசியம். அதனால் ஒவ்வொருவரும் தாய் நாட்டுக்கே முதலிடமளிக்க வேண்டும். நாட்டைக் காட்டிக்கொடுக்கக் கூடாது.

பாராளுமன்றத்தில் சிலர் எழுப்புகின்ற கேள்விகள் என்ன நோக்கத்திற்காக? யாருடைய தேவையை நிறை வேற்றுவதற்காக எழுப்பப்படுகின்றன என்பதை நாமறிவோம். சிலர் பணத்திற்காக எதையும் செய்யத் தயாராக இரு க்கின்றார்கள். அவர்களுக்கு பணமே முக்கியம். இவ் வாறான சிலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். பாதாள உலகம் கூட பணத்திற்காகவே இயங்குகின்றது.

இந்நாட்டுக்கு எதிராக தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் சூழ்ச்சிகள் இடம்பெறக் காரணம் எமது படையினர் பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்து அடைந்திருக்கும் வெற்றியேயாகும். இதனை ஒவ்வொரு வரும் நினைவில் கொள்ள வேண்டும். இப்போது நாட்டு மக்கள் மத்தியில் தாயகம் மீதான பற்று அதிகரித்திருக் கின்றது. தேசியக் கொடிக்கு முன்னொருபோதுமே இல்லாத அளவுக்கு முக்கியத்துவம் கிடைக்கப் பெற்றிருக்கின்றது.

தாயகத்தின் மீது அன்பும், பற்றும் கொண்டவர்களாக குழந்தைகளை உருவாக்க வேண்டும். அவர்களை நற்பண்புகள் நிறைந்தவர்களாக வளர்த்தெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாம் என்ன அபிவிருத்தி செய்தாலும் அவை பிரயோசனமற்றதாகிவிடும் என்றார்.

இவ்வைபவத்தில் அமைச்சர்களான டப்ளியூ. டி. ஜே. செனவிரட்ன, பியசேன கமகே, ஹேமகுமார, வட மத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திஸாநாயக்க, தென் மாகாண ஆளுநர் குமாரி பாலசூரிய, பிரதியமை ச்சர் லயனல் பிரேமசிறி உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • palli
    palli

    //பணத்திற்கும் ஏமாந்து தாய்நாட்டைக் காட்டிக் கொடுக்க வேண்டாமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் (11ம் திகதி) காலியில் வேண்டுகோள் விடுத்தார்//

    ஏனென்றால் அந்த வேலையை எமது குடும்பம் மட்டுமே மிகநிதானமாக செய்கிறோம், ஏற்க்கனவே பாகிஸ்த்தான்; சீனா;ரஸ்யா; யப்பான் இவைகளுடன் இந்தியாவுக்கும் எமது குடும்பம் இலங்கயை பிரித்து கொடுத்துவிட்டோம்; ஆகவே அதை இனிமேலும் காட்டி கொடுத்து எமது பொட்டுகேட்டை தெரியபடுத்த வேண்டாமே,

    Reply
  • Neville Perera
    Neville Perera

    What is there to be so embarrased?? They must be thinking all Srilankan politicians are no.1 thiefs!!

    Reply
  • Neville Perera
    Neville Perera

    சீனா – இந்தியா –பாகிஸ்தான் என்ற பிராந்திய முரண்பாட்டுக்குள், மேற்கு – சீனா என்ற உலகளாவிய முரண்பாட்டுக்குள், இலங்கை தனது அனைத்துவிதமான பாசிசக் கட்டமைப்பையும் புகுத்தியுள்ளது. இதன் மூலம் தன் வரைமுறையற்ற பாசிச குடும்ப ஆட்சியை நிறுவியது. நாட்டு வளத்தை விற்றது. இனப்படுகொலையைச் செய்தது. இதை இன்றும் தொடருகின்றது. இதற்குள் ஏகாதிபத்திய முரண்பாடு கூர்மையடைந்து வருகின்றது.

    பேரினவாத பாசிசமோ தன்னையும், தன் நாட்டையும் வெளியார் யாரும் கேள்வி கேட்கவோ, விமர்சிக்கவோ முடியாது என்கின்றது. இதுவே இந்த குடும்பத்தின் அரசியல் நிலையாகும். இந்த வகையில் ஊடகவியலாளர் முதல் மேற்கு ராஜதந்திரிகள் வரையும், அது தன் பாசிச மொழியில் ஒடுக்கியும் நாட்டை விட்டு வெளியேற்றியும் வருகின்றது.

    புலிகளைக் காட்டி தொடர்ந்து கட்டமைத்து வரும் சர்வாதிகார பாசிச ஆட்சியமைப்பு, மக்கள் நெருக்கடியின்றி நீடிக்கின்றது. எதிர்க்கட்சிகளின் துணையுடன், அவசரகாலச் சட்டத்தை கொண்டு, பாசிச நடத்தையை சட்டப்படியான ஒன்றாக மொத்த சமூகம் மீதும் ஏவுகின்றது. இதில் பாதிக்கப்படும் ஜே.வி.பி உள்ளிட்ட எதிர்க் கட்சிகள், இந்த அவசரகாலச் சட்டத்தை எதிர்த்து வாக்களிப்பதில்லை. தங்கள் பாராளுமன்ற வருமானம், 5 வருடத்தின் பின்னான ஓய்வுகால ஊதியம் என்று சுயநல அரசியல் மூலம், அவசரகாலச் சட்டமூலத்தை நாட்டின் சட்டமாக வைத்திருக்க உதவுகின்றனர். இப்படி பாசிசம் நாட்டின் ஆட்சியாக இருக்க, அதற்கு உதவும் அவசரகால சட்டத்தை அனைவரினதும் துணையுடன் மக்கள் மேல் ஏவுகின்றனர்.

    எதிர்க் கட்சிகளோ மண்ணில் இல்லாத புலியைக்காட்டி, அவசரகால சட்டத்தை நாட்டின் உயிர் நாடியாக காட்டி, அது நீடிக்க உதவுகின்றனர். இப்படி இவர்கள் இதற்கு விளக்கம் கொடுக்க, 3 இலட்சம் மக்களை திறந்தவெளிச் சிறையில் பலாத்காரமாக சிறையில் வைத்திருக்கின்றது இந்த அரசு. எந்த சட்டத்தின் அடிப்படையிலும் இதைச் செய்ய முடியாத போதும், வன்னி நிலத்தை அன்னிய மூலதனத்துக்கு தாரை வார்க்கும் திட்டத்துடன், இது அந்த மக்கள் மேலான திணிப்பாகின்றது. இதற்கேற்ப கண்ணிவெடி முதல் புலிகள் களையெடுப்பு வரையான காரணத்தைக் கூறி, பாசிசம் சுயவிளக்கமளிக்கின்றது.

    Reply