ரமழான் மாத காலத்தில் உம்றா கடமையை நிறைவேற்றுவதற்கு மக்கா செல்வதற்காக சவூதி அரேபிய அரசாங்கம் வழங்கிய 100 இலவச விசாக்கள் இன்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவினால் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் ஆண், பெண் யாத்திரிகர்களுக்கு வழங்கப்பட்டன.
இது தொடர்பான வைபவம் கொழும்பிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் கற்கை நிலையத்தில் இன்று முற்பகல் நடைபெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் ரமழான் மாதத்தில் முஸ்லிம்களுக்கான இலவச விசாக்களை வழங்கியமையானது, ஜனாதிபதி மீது சவூதி அரேபிய அரசாங்கம் வைத்துள்ள நம்பிக்கைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும் எனத் தெரிவித்துள்ள அமைச்சர் சவூதி அரேபிய அரசாங்கத்துக்கும் சவூதி அரேபியத் தூதுவர் ஜமாசுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.