இலங்கையில் பாகிஸ்தான் கப்பல்!

ships000.jpgநல் லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் யுத்தக் கப்பலான ‘சுல்பிகார்’ கப்பலின் கட்டளை அதிகாரிக்கும் இலங்கை கடற்படைத் தளபதிக்குமிடையில் சந்திப்பொன்று  இடம்பெற்றுள்ளது. கெப்டன் சாஹித் இல்யாஸ¤க்கும்,  இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திஸர சமரசிங்கவுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் உள்ள கடற்படைத் தலைமையகத்தில் ‘சுல்பிகார்’ கப்பலின் கப்டன் சாஹித் இல்யாஸ_ம் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திஸர சமரசிங்கவும் நேற்று முன்தினம் சந்தித்து உரையாடினர். இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்தாலோசித்துள்ளனர்.

நான்கு நாள் நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தானின் ‘சுல்பிகார்’ கப்பல் இலங்கை வந்தது. 14 அதிகாரிகள் மற்றும் 188 கடற்படை வீரர்களுடன் வருகை தந்துள்ள சுல்பிகார் எனும் இந்தப் போர்க் கப்பல் 123 மீற்றர் நீளத்தையும், 13.2 மீற்றர் அகலத்தையும், 30.7 மீற்றர் உயரத்தையும் கொண்டது.

இந்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்திலிருந்து இன்று பாகிஸ்தான் நோக்கி புறப்பட்டுச் செல்லவுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் டி. கே. பி. தஸநாயக்க தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • palli
    palli

    அப்ப சீனா கப்பல் என்னும் வந்து சேரவில்லையா?
    என்ன சீனா ஓட்டியை மாத்து, இல்லாவிடில் உனது இடத்தை பாகிஸ்த்தான் கவ்விவிடும்??

    Reply
  • santhanam
    santhanam

    பாகிஸ்த்தான் புலிகளிற்கும் மிகநம்பிக்கைகுரிய நாடு அவர்கள் கொண்டு வந்து இந்தியகரையில் தந்த சமான்களை மறந்து விட்டீர்களா? தமிழன் அமெரிக்கா கப்பலை பார்த்து ஏமாந்து ராஐபக்சாவிடம் சரணாகதி…….

    Reply