மவுசகலை, கித்துள்கலை, யட்டியந்தோட்ட மற்றும் அவிசாவளை ஆகிய பகுதிகளில் கடந்த இரு நாட்களாக பெய்த கடும் மழை காரணமாக மவுசகலை அணைக்கட்டின் மதகு திறந்து விடப்பட்டுள்ளது.
மத்திய மாகாணத்தில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக வெள்ள அபாயம் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று காலை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்படிப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் அவதானமாக இருக்கும்படியும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.