உலக அளவில் பன்றிக் காய்ச்சலால் இதுவரை 2.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள பரிசோதனைக் கூடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, 2.5 லட்சம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை, 2,840 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரியான கிரிகோரி ஹர்டல் தெரிவித்துள்ளார்.
பன்றிக் காய்ச்சலுக்கு காரணமான வைரஸ் வேகமாக பரவி வருவதே இதற்கு முக்கிய காரணம். தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் குறிப்பாக, இந்தியா, வங்கதேசம், மியன்மர்,தாய்லாந்து, கம்போடியாää இலங்கை மற்றும் இந்தோனேசியாவில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்;.