தோற்கடிக்க முடியாததெனக் கருதப்பட்டு வந்த பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஓர் ஒப்பற்ற தலைவர் என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி குளோரியா அரோயோ தெரிவித்துள்ளார்.
லிபியாவின் 40 ஆவது சுதந்திரதின நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக அந்நாட்டுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்துக் கலந்துரையாடியபோதே பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
இரு தலைவர்களுக்குமிடையிலான இந்தப் பேச்சுவார்த்தையின்போது பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதோடு பயங்கரவாதத்துக்கு எதிராக சர்வதேச ரீதியாகவும் தென்கிழக்கு ஆசியப் பிராந்திய ரீதியிலும் போராடுவது குறித்தும் ஆராயப்பட்டது.
இலங்கையில் பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பதற்கு பாதுகாப்புப் படையினருக்கு சிறந்த வழிகாட்டல்களை வழங்கியமைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பாராட்டினார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.