இலங்கை மின்சார சபை ஊழியர்களின் விடுமுறைகள் காலவரையின்றி இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவிக்கிறது.
இன்று 28 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் விதத்தில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் மறு அறிவித்தல் வரை விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபையின் தலைவர் கே. ரணவீர அறிவித்துள்ளார். நாட்டினது அத்தியாவசிய சேவையாகக் கருதப்படும் மின்சார விநியோக சேவையை சீராகவும் தொடர்ச்சியாகவும் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே சபை இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
எவ்விதத் தடையும் இன்றி ஊழியர்களுக்கு சேவையை மேற்கொள்வதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் மின்சார சபையின் தலைவர் மேலும் தெரிவித்தார்.