ஹம்பாந் தோட்டை துறைமுக நிர்மானப்பணிகள் அடுத்த ஒன்றரை வருடத்தில் நிறைவடையவுள்ளன. இது வரையில் அதன் நிர்மானப்பணிகளின் 40 வீதமான வேலைகள் பூர்த்தியடைந்துள்ளன.
இத்துறைமுக கடற்பிரதேசத்தின் ஆழம் 17 மீற்றர்களாகும. இதன் வேலைத்திட்டம் பூர்த்தியானதன் பின்னர் தனியார் கைத்தொழிற்றுறையும் ஏனைய தொழிற்றுறைகளும் விருத்தியடையும். இத்துறைமுகத்தினால் தெற்கில் பெரியளவிலான வர்த்தக மேம்பாடு ஏற்படுவதுடன் எதிர்காலத்தில் அதிகமான வேலைவாய்ப்புக்கள் உருவாவதற்கும் சந்தர்ப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.