ஐ.பி.எல்., அணியை வாங்க பொலிவுட் நாயகன் சல்மான் கான் ஆர்வமாக உள்ளார். இதையடுத்து சல்மான், ஷாருக்கான் அணிகளின் மோதலை ரசிகர்கள் காணலாம
ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்ற 8 அணிகளும் ஏலம் மூலமாக கோடிகள் கொடுத்து வாங்கப்பட்டன. பாலிவுட் நட்சத்திரங்களான ஷாருக்கான் மற்றும் ஜுஹி சாவ்லா இணைந்து கொலகாத்தா நைட் ரைடர்ஸ் அணியை வாங்கினர். நடிகை பிரித்தா ஜிந்தா (கிங்ஸ் இலவன் பஞ்சாப்), ஷில்பா ஷெட்டி(ராஜஸ்தான் ரோயல்ஸ்) என்ற வகையில் அணிகளை வாங்கினர்.
இவர்கள் வரிசையில் சல்மான் கானும் சேருகிறார். முதலாவது ஐ.பி.எல்., தொடரின் நிறைவு விழாவில் நடனம் ஆடி இரசிகர்களை கிறங்கடித்த இவர், சொந்தமாக ஒரு அணியை வாங்க முடிவு செய்துள்ளார்.
வரும் 2011ல் நடக்க உள்ள நான்காவது ஐ.பி.எல்., தொடரில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட உள்ளன. இவற்றில் ஒன்றை வாங்க திட்டமிட்டுள்ளார். இது குறித்து ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடியை நேற்று மும்பையில் சந்தித்து பேசியுள்ளார்;.
2011ல் நடக்க உள்ள ஐ.பி.எல்., தொடரில் 2 அணிகளை அறிமுகப்படுத்த உளளதாகவும். அதற்கான ஏலம் 2010, ஜனவரியில் நடக்க உள்ளது எனவும் ஒரு அணியின் விலை 1000 கோடி ரூபா முதல் ஆயிரத்து 500 கோடி வரை இருக்கலாம என்றும் லலித் மோடி கூறியுள்ளார்.