மூன்றரை கோடி பெறுமதியான சிகரட் வகைகளை சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட இந்த சிகரட் வகைகளின் மூலம் அரசாங்கத்திற்கு பாரியளவு வரி வருமான நட்டம் ஏற்பட்டுள்ளதெனக் குறிப்பிடப்படுகிறது. சட்டவிரோதமாக தருவிக்கப்பட்ட சிகரட் வகைகளை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பயணப் பொதி என்ற போர்வையில் பெருந்தொகை சிகரட்டுக்கள் டுபாயிலிருந்து கடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு சட்டவிரோதமாக கொண்டு வரப்படும் சிகரட் வகைகளினால் பெரும் நட்டம் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.