இலங் கையின் கிழக்கு மாகாணத்தில் உல்லாசப் பயணத்துறையில் பிரபலமான பெற்றுள்ள கடலோர பிரதேசங்களிலொன்றான பாசிக்குடா சுமார் 25 வருடங்களின் பின்பு தற்போது மீண்டும் தொடங்கியுளள்து.
கடற் குளிப்பிற்கு சர்வதேச ரீதியில் பிரபல்யம் பெற்றுள்ள பாசிக்குடாவிற்கு உள்நாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் உட்பட தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அங்கு சென்று தமது பொழுதைக் கழித்து திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
உல்லாசப் பயணிகளின் வருகை காரணமாக தமது பொருளாதாரம் தற்போது முன்னேற்றமடைந்து வருவதாக உள்ளுர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தப் பிரதேசத்தில் உல்லாசப் பயணத்துறையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் தற்போது மேற்கொண்டுள்ளதால், நிலங்களுக்கும் கிராக்கி ஏற்பட்டுள்ளதாக கூறும் உள்ளுர்வாசியொருவர், கடந்த கால யுத்த சூழ்நிலை காரணமாக வெளியாட்கள் இங்கு வரவில்லை என்றும் கருத்து வெளியிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் பாதிக்கப்பட்டிருந்த தமது தொழில் கூட தற்போது முன்னேற்றம் அடைந்து வருவதாக விருந்தினர் விடுதியொன்றின் உரிமையாளர் தெரிவிக்கின்றார்.