சின் சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில் உலகின் “நம்பர்-1′ வீரரான சுவிட்சர்லாந்தின் ரொஜர் பெடரர் சாம்பியன் பட்டம் வென்றார். அமெரிக்காவில் உள்ள சின்சினாட்டி நகரில் ஏ.டி.பி., சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் இறுதிப்போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், செர்பியாவின் நொவாக் ஜோகோவிச்சை சந்தித்தார்.
விறுவிறுப்பான இப்போட்டியின் முதல் செட்டை பெடரர் 6-1 என கைப்பற்றினார். தொடர்ந்து அபாரமாக ஆடிய பெடரர் இரண்டாவது செட்டை 7-5 என சற்று போராடி தன்வசப்படுத்தினார். இறுதியில் பெடரர் 6-1, 7-5 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் இத்தொடரில் மூன்றாவது முறையாக (2005, 2007, 2009) சாம்பியன் பட்டம் வென்றார் பெடரர்.