இந்திய ராணுவத்திற்காக, புதிதாக தயாரிக்கப்படட பீஷ்மா எனப்பெயர் கொண்ட “டி-90′ அதி நவீன பீரங்கிகள், நேற்று உத்தியோகபூர்வமாக பாதுகாப்பு பணிக்காக ஒப்படைக்கப்பட்டன. இதனை உற்பத்திசெய்த சென்னை,ஆவடி கனரக வாகன தொழிற்சாலை வளாகத்தில் அதற்கான விழா நடந்தது. இத்திட்டத்துக்கு ரஷ்யா தொழில்நுட்ப ஒத்துழைபபை வழங்கியுள்ளது.
இதில், உள்நாட்டு தொழில் நுட்பம் அதிக அளவில் பயன்படுத்தப் படுவதால், வெளிநாடுகளில் இருந்து தளவாடங்கள் இறக்குமதி செய்யப்படுவது, 5 சதவீதம் குறைந்துள்ளது. இந்த பீஷ்மா டி-90 பீரங்கி, 21ம் நூற்றாண்டுக்கு ஏற்ற அதி நவீன போர் கவச வாகனமாக திகழும் என இந்தியா தெரிவித்துள்ளது