தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்குச் சொந்தமான பத்து சிறியரக விமானங்கள் கிழக்கு ஆபிரிக்க நாடான எரித்திரியாவில் நிற்பதாகவும், இவை அந்த நாட்டு விமான நிலையத்திலேயே நிறுத்தப்பட்டிருப்பதாகவும் கொழும்பில் இருந்து வெளிவரும் சிங்கள நாளேடான “லங்காதீப’ செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விமானங்களை பயன்படுத்தியே வானூர்திப் பயிற்சிகளை எரித்திரிய விமான நிலையத் தரப்பு மேற்கொண்டு வருவதாகவும், இந்த விமான நிலையத்தை நிர்வகித்துவரும் நிறுவனம் விடுதலைப் புலிகள் அமைப்புடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருப்பதாகவும் இந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. மலேசியாவில் இருந்து அண்மையில் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்து வரப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் புதிய தலைவர் செல்வராஜா பத்மநாதனை விசாரணைக்கு உட்படுத்தியபோது இந்தத் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
chandran.raja
நாடுகடந்த தமிழீழத்திற்கான தூரகம் எரித்திரியாவில் அமைக்கப்படும். என்பது நேற்றய ஜிரிவின் செய்தி. தாயகப்புலிகள் மரணிததில் விரக்கதியில் இருந்த புலம்பெயர் புலிகளுக்கு இது மகிழ்சியான செய்தியே என்பதில் சந்தேகமில்லை. முந்தியபாச்சல் இல்லாவிட்டாலும் சிறுதளவில்லாவது வருவாய்கான வழியைத் திறந்து விடும்.
ஊறுகாய் கறிவேப்பிலை முருங்கக்காய் போன்ற இலங்கைப் பொருள்களை நிராகரித்து இலங்கை பொருளாதாரத்தை வீழ்த்துகிற நடவடிக்கை பிசுபிசுத்துப்போனதால் அடுத்த கட்டமாக கட்டுநாயக்கா ஏ.9 நெடுஞ்சாலையும் நிராகரிப்பார்கள். மன்னார் வவுனியா கிளிநொச்சி முல்லைத்தீவு யாழ்பாணம் போகிறவர்கள் எதிர்திரியா போய் விசா பதிவுசெய்து தான் தாய் நாட்டுபயணத்தை மேற்கொள்ள வேண்டும். இதுநேரடியாக கட்டுநாயக்காபோய் இறங்கமுடியாது .இராமேஸ்வரத்தில்லிருந்து படகுச் சேவையை பயன்படுத்தவேண்டும். முகவர்களாக நெடுமாறன் வைகோ ராமதாஸ் திருமால்வளன் போன்றோர் செயல்படுவார்கள். போராட்டத்தை பற்றி கசக்குமுசக்கு என்று திட்டுகிறவர்கள் இனி என்ன செய்ப்போகிறீர்கள்?இது “ஒறியினல்” தமிழர்போராட்டம் ஐயா.