சி.ஐ.ஏ. செய்த கைதிகள் துஷ்பிரயோகம்: வழக்குகளை மீண்டும் நடத்த அமெரிக்க நீதித்துறை பரிந்துரை

guantanamo.jpgஅமெரிக் காவின் உளவுப் பிரிவான சி.ஐ.ஏ.வினர் சிறைக் கைதிகளை விசாரிக்கும்போது நடைபெற்ற துஷ்பிரயோகங்கள் தொடர்பான வழக்குகள் பலவற்றை மீண்டும் தொடங்குவதற்கு அந்நாட்டின் நீதித்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளதாக வாஷிங்டனில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் சி ஐ ஏ வின் ஊழியர்களும், அதனுடனான ஒப்பந்தக்காரர்களும் குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

அமெரிக்க நீதித்துறையின் இந்த பரிந்துரையானது, முன்னர் அதிபராக இருந்த புஷ் அவர்களின் நிர்வாகம் எடுத்த கொள்கையினை மாற்றியைக்கும்.

தீவிரவாதம் தொடர்பான சந்தேக நபர்களை சி ஐ ஏ நடத்திய விதம் குறித்த தகவல்கள் இன்று வெளியிடப்படவுள்ளது.

கடந்த ஆண்டு இது தொடர்பான மூல அறிக்கை வெளியான போது, இந்த துஷ்பிரயோகங்கள் குறித்த தகவல்கள் வெளியாகாமல் தடுக்கப்பட்டன.

புதிய தகவல்கள் மரண தண்டனையை நிறைவேற்றுவது போல போலியாக செய்து காட்டியது குறித்தும், மின்சார துளையிடும் கருவியைக் கொண்டு அச்சுறுத்தியது குறித்தும் புதிய விபரங்களை வெளிக் கொண்டுவரக்கூடும் என அமெரிக்க பத்திரிகைகள் எதிர்வு கூறுகின்றன.

எதிர்காலத்தில், வெள்ளை மாளிகையின் கண்காணிப்பின் கீழ் பயங்கரவாத சந்தேகநபர்கள் மீது விசாரணைகளை நடத்துவதற்கான ஒரு புதிய துறை உருவாக்கப்படுவதற்கு அதிபர் ஒபாமா ஒப்புதல் வழங்கியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *