பரீட்சை வினாத்தாள்கள் நெருக்கடி தொடர்ந்த வண்ணமே உள்ளது. இன்று 23ஆம் திகதி ஆரம்பமான 5ஆம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சையிலும் காலி மாவட்டத்தில் ஒரு பாடசாலைக்கு 40 வினாத்தாள்கள் குறைந்ததால் 40 வினாடிகள் பரீட்சையை ஒத்திவைக்க நேர்ந்துள்ளது.
எனவே, பரீட்சைகள் தொடர்பாக எழுந்துள்ள நெருக்கடிகளைத் தீர்க்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை கல்வியமைச்சு மேற்கொள்ள வேண்டுமென ஜே.வி.பி. கோரிக்கை விடுத்துள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்தவுக்கு ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க ஞாயிற்றுக்கிழமை அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.