வடக்கின் வசந்தம் கருத்திட்டத்தின்கீழ் யாழ். துரையப்பா விளையாட்டரங்கு சர்வதேச விளையாட்டரங்காக புனரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான நிதியை இந்தியாவிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருவதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வடக்கின் வசந்தம் கருத்திட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். யாழ். முன்னாள் மேயர் அல்பிரட் துரையப்பா கடந்த 1975 ஆம் ஆண்டு புலிகளின் துப்பாக்கிக்குப் பலியானார். புலிகளால் படுகொலை செய்யப்பட்ட முதலாவது அரசியல்வாதி இவரே. இதன் நினைவாகவே யாழ். விளையாட்டரங்குக்கு இவரது பெயர் சூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.