நாடு முழுவதும் இன்று நடைபெறும் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை யில் வவுனியா நிவாரணக் கிராமங்கள் உட்பட நாடு பூராவும் 3 இலட்சத்து 101 மாணவர்கள் தோற்றுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கிறது.
நாடு முழுவதும் நடை பெறும் இப்பரீட்சைக்கு சிங் கள மொழிமூலம் 2 இல ட்சத்து 24 ஆயிரத்து 818 பரீட்சார்த்திகளும், தமிழ் மொழி மூலம் 69, ஆயிரத்து 984 பரீட்சார்த்திகளும் தோற்றுகின்றனர்.
நாடு முழுவதும் 2602 பரீட்சை நிலையங்களில் இப் பரீட்சை நடைபெறவுள்ளதுடன் 471 நிலையங்கள் பரீட்சை இணைப்பு நிலையங்களாக இயங்கும் எனவும் பரீட்சை ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்தார்.