பிறக்கின்ற குழந்தைகளுக்கு பிரபாகரன் என்று பெயரிடுங்கள் : -வைகோ

vaiko-pira.jpgதேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டடிருந்த பெரியார் திராவிடர் கழக உறுப்பினர்களை கௌரவிக்கும் பொருட்டு புரசைவாக்கத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்வொன்றில் பேசிய மக்கள் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் வை.கோபாலசாமி தமிழ் நாட்டில் பிறக்கின்ற குழந்தைகளுக்கு பிரபாகரன் என பெயரிடுங்கள் என வேண்டியுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது குற்றம் என்றால், தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிரபாகரன் என்று பெயர் வைக்கும் அனைவரையும் கைது செய்ய முடியுமா என கேள்வி எழுப்பியதுடன் தடைசெய்யப்பட்ட இயக்கம் ஒன்றை ஆதரித்து பேசுவது குற்றம் என்பது ஒருவரது கருத்துச் சுதந்திரத்தை மீறும் செயல் எனவும் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    முட்டாள்த் தனமாக கதைப்பதில் வைகோவிற்கு இணையாக எவரையுமே சொல்ல முடியாது. தமிழக அரசு தடைசெய்யப்பட்ட அமைப்புகளை ஆதரிப்பவர்கள் மேல் நடவடிக்கை எடுப்பதற்கும், ஒருவர் தன் பிள்ளைக்கு பிரபாகரன் என்று பெயர் வைப்பதற்கும் என்ன சம்மந்தம். வைகோ தனது பேரப்பிள்ளைகளுக்கே பிரபாகரனின் பெயரை வைக்காத போது, அடுத்தவர்கள் வைப்பது பற்றி கதைப்பதில் என்ன பயன்??

    Reply
  • sekaran
    sekaran

    வளர்ந்ததும் அந்த சைக்கோ கேஸின் பேரையா எனக்கு வைத்தீர்கள் என்று பிள்ளைகள் கேட்கக்கூடும். ஆகவே அம்மா அப்பாக்கள் 1 தடவைக்கு 100 தடவை யோசிக்கவும்.

    Reply
  • Kugan
    Kugan

    வைகோவின் இந்த முட்டாள் தனமான பேச்சு ஒன்று போதும் புலிகள் அழிந்து போனதை இட்டு மகிழ்வதற்கு. தமிழ் நாட்டில் இன்னும் எத்தனை படிக்காத அப்பாவி மக்களை பிரபாகரனுக்காக தீ குளிக்க வைப்பாரோ தெரியவில்லை.

    வைகோ, பிரபாகரன் போன்றோர்களால் தமிழ் நாட்டுக்கே ஆபத்து.

    Reply
  • haran
    haran

    ஒரு தோற்றுப்போனவரின் பெயரைக் கூட வைக்கலாம் ஆனால் ஒரு தமிழினத்தின் ……… பெயரை தமிழர் போராட்டத்தை காட்டிக் கொடுத்த ஆயிரக்கணக்கான தமிழ்ரகளை கொலை செய்தவரின் பெயரை இப்படி வியாபாரம் செய்யும் வைகோ உம்மையும் உமது நெடுமாறனையும் என்னவென்று சொல்வது

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    குகன்
    வைகோ, நெடுமாறன், ராமதாஸ் போன்ற வீரவசனம் பேசுபவர்கள் எவரும் தாம் தீக்குளிக்க முயன்றதில்லை மாறாக தமது தொண்டர்களை உசுப்பேற்றி அவர்களைத் தீக்குளிக்க வைத்து அரசியல் இலாபம் பார்த்தவர்களே. இலங்கைத் தமிழர்களின் அவலங்களைப் பார்த்து இரத்தக் கண்ணீர் வடிக்கின்றோமென்று அப்பப்போ நீலிக்கண்ணீர் அறிக்கைகள் விட்டதுடன் சரி.

    Reply
  • Saranan
    Saranan

    தன்னையோ தமிழ் மக்களையோ சிந்தித்துச் செயற்பட முடியாதவன் பெயரை எதிர்காலப் பிள்ளைகளுக்கு இடுமாறு அறிவுறுத்த நீர் யார்? அந்த அளவு ஆதங்கம் இருந்தால் உமது பெயரையே பிரபாகரன் என்று மாத்தலாமே நீர்எல்லாம் எப்படி சட்டக்கலலூரிக்குப் போய் மீண்டீரோ ஆண்டவன் சித்தம். நானும் கண்டதில் கேட்டதில் உம்மைப் போல் மைத்திகாரனை உலகில் காணவே இல்லை. உம்மோடு அரசியல் பேசுவது பொருத்தப்பாடில்லை அசிங்கம் தான் பேசவேண்டும் மனிதரைக் கேடயமா வைத்தும் தப்ப முடியவில்லை என்றதும் மண்டியிட்டு மண்டையைப் பிளந்துகொண்ட …….. பெயரை வருங்காலம் வரப்பிரசாதமாக எடுக்குமா ………… உம்மை நீரே சரிபார்த்துக் கொள்ளுங்கள்!

    Reply
  • பல்லி
    பல்லி

    பிரபாகரன் என்னும் பெயரை சூட்டியதால் வேலுபிள்ளை படும் அவலம் வைகோ அறிய முடியவில்லை போல் உள்ளது; கிடு கிடு வைகோ அவர்களே வேலுபிள்ளை குடும்பத்திடம்(நீங்கள் உங்கள் 60ம் திருமணத்தில் அவமதித்த) கேளுங்கள் பிரபாவின் பெயரால் அவரை பெற்ற பெற்றோர் பட்ட அவலத்தை; நாகரிகம், கருதி இத்துடன் முடிக்கிறேன் ஆமா:

    Reply
  • பல்லி
    பல்லி

    நண்பர்களே உன்மையில் ஆரம்ப காலத்தில் வைகோ டெலோ ஆதரவாளர் என்பது பலருக்கு தெரியாது; கால போக்கில் ஸ்ராலினை எதிர்க்க திமுகா வை விட்டு வெளியேறிய பின் போட்ட தடிப்பான போர்வைதான் ஈழதமிழர், ஈழம், புலிகள், வைகோவுடன் நேரடியாக விவாதிக்க பல்லி தயார் வைகோ ரெடியா,,,,?????

    Reply
  • Niro
    Niro

    அண்ணாத்தையளே!!
    அடேங்கடா….எருது இளைத்தால் கழுகுக்கு கொண்டாட்டம் என்று சொல்லுவார்கள், அது எவ்வளவுக்கு உண்மை என்று நிரூபித்துவிட்டீங்களே!!!!

    Reply
  • மாயா
    மாயா

    பாவம், பைத்தியங்களை திட்டாதீர்கள். இவர்கள் தமிழ் நாட்டை தமிழீழமாக பிரகடனப்படுத்தினாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.

    Reply
  • thurai
    thurai

    புலத்திலுள்ள புலியின் ஆதரவாளர்களில் யாரவது முன் வந்து வைக்கோவின் ஆசையை நிறைவேற்றுவார்களா?

    துரை

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    Niro,
    இதிலை எருது யார்? கழுகு யார்? உதாரணத்திற்கு கூட, அறிவு குறைஞ்சதுகளைத் தான் மேற்கோள் காட்டியிருக்கிறியள்.

    Reply
  • itam
    itam

    அன்பர் வைகோ மிகவும் உணர்சிவசப்படுகிறவர் என்று அனைவரும் அறிவர். ஆனால் இவ்வளவு தூரம் போவார் என்று எண்ணவில்லை !!! இரண்டாம் உலக போர் முடிந்தவுடன் ஜெர்மானிய மக்கள் தங்களது துன்பத்திற்கு காரணம் தங்களது நாட்டை குண்டு மழை பொழித்து அழித்த அமெரிக்க அல்ல, தங்களை அழிவுப்பதைஇல் இட்டு சென்ற ஹிட்ட்ல்ர்தான் என உணர்ந்து இன்று நல் நிலையில் உள்ளார்கள் !!! அங்கே யாரும் ஹிட்லர் புகழ் பாடுவதில்லை!! ஹிட்லர் கூறிய ஆரிய கொள்கைகளை மறந்தும் பேசுவதில்லை!!! அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என கூறிய நமது தமிழினா தலைவர் திருந்தியதால் … அவர்தம் குடும்ப நலனை பாருங்கள். பாவம் வைகோ அவர் கட்சி அவர் சார்ந்த அம்மா கட்சி போல் கல் எறியப்பட்ட தேனீ கூட்டைபொல் கலகலத்துக்கொண்டு இருக்கிறது

    பிரபாகரனிடம் பெற்ற தொகைக்கு நன்றி கைமாறா? அவரே போய் சேர்ந்து விட்டாரே இனி என்ன இவர் அந்த தலைமையை ஏற்று புலியை வழி நடத்தப்போகிராரா….. காமெடி பண்ணிக்கிட்டு சீரியஸ் இருக்கும் போது.. .நீங்க மற்றும் உங்கள் நண்பன் ராமதாஸ் இருவரும் அரசியல் காமெடியன்

    Reply
  • மாயா
    மாயா

    // காமெடி பண்ணிக்கிட்டு சீரியஸ் இருக்கும் போது.. .நீங்க மற்றும் உங்கள் நண்பன் ராமதாஸ் இருவரும் அரசியல் காமெடியன் – itam //

    தமிழர்கள் உணராத ஒன்றை , முன்னைய இராணுவ தளபதி சிங்களவராக இருந்தும் உணர்ந்ததால்தான் தமிழக அரசியல்வாதிகள் தமிழக காமடியன்கள் என்றார். எவ்வளவு உண்மை?

    Reply