இலங் கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் தற்போது குற்றச் செயல்களுக்கு தண்டனையிலிருந்தும் விலக்கீட்டு உரிமை பெறும் விவகாரம் பொதுமக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்துவதாக உருவாகியுள்ளது. 1971 இல் மாக்ஸிஸ்ட் கிளர்ச்சி ஏற்பட்ட காலம் முதல் பாதுகாப்பு சேவைத்துறையின் உறுப்பினர்கள் அல்லது குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்கள் நாட்டின் செல்வாக்கும் அரசியல் ரீதியில் தொடர்பும் உடைய வட்டாரங்களில் தந்திரோபாயமான ஆதரவுடன் சித்திரவதை அல்லது தண்டனைகளை முன்னெடுத்துச் சென்ற, செல்கின்ற வரலாற்றை இலங்கை கொண்டுள்ளது.
யுத்தம் முடிவடைந்த நிலையில் தனிப்பட்ட அல்லது வர்த்தக அல்லது அரசியல் காரணங்களுக்காக இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபட்டு விலக்கீட்டு உரிமை பெறுவது தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் பொறுமை காக்கப்படும் நிலைமை இல்லாமல் போய்விடும் நிலைமை உருவாகியிருக்கிறது. தண்டனை விலக்கீட்டு உரிமையானது முதலீட்டாளர்களுக்கு நட்புறவுடனான நாடு என்ற பிரதிமையை இலங்கை மீள ஏற்படுத்திக் கொள்ள மேற்கொள்ளும் முயற்சிக்கு சவாலாக உள்ளதாக ராய்ட்டர் செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.
அண்மைய வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக பொலிஸார் மீது பொதுமக்கள் விசனமடைந்துள்ளதை வெளிக்காட்டுவதாக ஆசிரியர் தலையங்கங்கள் வெளிவந்திருக்கின்றன. யுத்தகாலத்தில் விமர்சிப்போரை துரோகிகளென பட்டியலிடும் நிலையில் இது அபூர்வமாக உள்ளது. தப்பிச் செல்ல முடியாத யதார்த்தம் என்னவெனில் இயல்பு நிலை அல்லது இயல்பு நிலையை அண்மித்த நிலை உருவாக்கப்பட்ட நிலைமையில் மக்கள் தமது கண்களை திறந்து வைத்திருக்கின்றனர். சாதாரண மக்களுக்கு எதிரான பொலிஸ் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக பொதுமக்கள் இப்போது தமது கண்களை திறந்துள்ளனர் என்று ஞாயிறு ஐலண்ட் பத்திரிகை இந்த வாரம் தெரிவித்துள்ளது. இப்போது எமக்கு தேவை…. தெளிவான முறையில் சிதைவடைந்திருக்கும் முறைமையை துப்புரவு படுத்துவதே என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மாணவன் ஒருவனை கடத்தி சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் திங்கட்கிழமை 11 பொலிஸ் அதிகாரிகளை நீதிமன்றம் விளக்கமறியலில் வைத்துள்ளது. செல்வாக்குமிக்க பொலிஸ் அதிகாரி ஒருவரின் மகனுடனான தகராறு தொடர்பாகவே நீதிமன்றம் இந்த விளக்கமறியல் உத்தரவை விடுத்திருந்தது. சிரேஷ்ட அதிகாரி இடமாற்றப்பட்டுள்ளார். ஆனால் குற்றச்சாட்டு சுமத்தப்படவில்லை என்று பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.
கடந்த வாரம் கொழும்பின் புறநகர்ப்பகுதியில் பொதுமக்கள் பொலிஸ் நிலையமொன்றை முற்றுகையிட்டு ரயில்களை தடுத்தனர். இருவர் கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். பொலிஸ் நிலையத்திற்குப் பொறுப்பான அதிகாரியின் பெண் சிநேகிதியை இந்த ஆட்கள் கடுமையாக விமர்சித்திருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
பொலிஸார் அவர்களை கைது செய்திருந்ததன் பின்னர் இருவரின் சடலங்கள் சூட்டுக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டன. பொறுப்பதிகாரி உட்பட 7 அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். குற்றத் தொடர்பு குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். நாட்டில் தோற்றம் பெற்றிருக்கும் அரசியல் முறைமையானது சிலசமயம் ஸ்திரமின்மையையும் குழப்பத்தையும் தோற்றுவித்திருக்கலாம். இதற்கு இலங்கையிலுள்ள பொலிஸார் அதிகளவு பங்களிப்பை செலுத்தியுள்ளனர் என்று ஹொங்கொங்கைத் தளமாகக் கொண்டியங்கும் ஆசிய மனித உரிமை ஆணைக்குழுவைச் சேர்ந்த பசில் பெர்னாண்டோ கூறியுள்ளார். பாதாள உலகத்தவருக்கு எதிரான யுத்தத்தை அரசு பிரகடனப்படுத்தியுள்ளது.
குற்றச்செயலில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது. கிடைக்கும் சான்றாதாரத்தின் அடிப்டையில் எந்த நிலைமையில் அல்லது சிரேஷ்ட தரத்தில் இருந்தாலும் குற்றச் செயலில் ஈடுபட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நாம் தயங்கமாட்டோம் என்று தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல கூறியுள்ளார்.