நல்லூர் தேர்த்திருவிழாவில் இலட்சக்கணக்கில் பக்தர்கள் – விமானங்கள் பூமழை பொழிய முருகன் வீதிஉலா

mainpic3.jpgசரித்திர பிரசித்திபெற்ற நல்லூர் கந்த சுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த்திரு விழா நேற்றுக் காலை சிறப்பாக நடந்தேறியது. காலை 7.15க்கு முருகப் பெருமான் தேரில் ஆரோகணித்து 9.15 மணியளவில் தனது இருப்பிடத்தை வந்தடைந்தார்.

இலட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் முருகப் பெருமானின் தேர் வலம் வந்து கொண்டிருந்த போது இலங்கை விமானப்படை விமானங்கள் வானிலிருந்து பூமழை பொழிந்தன. இது கண்கொள்ளாக் காட்சியாக இருந்ததோடு அனைவரையும் மெய்ச்சிலிர்க்கச் செய்தது.

குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இலங்கையின் தென்பகுதி மற்றும் ஏனைய பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்து நல்லைநகர் கந்தனின் தேர் உற்சவத்தைக் கண்டுகளித்தனர்.

இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சு தென் இலங்கையில் இருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வரும் பக்தர்களின் வருகைக்காக மிகக் குறைந்த செலவில் கொழும்பு யாழ்ப்பாணத்திற்கான விமான சேவையினை வழங்கியிருந்தது. அத்துடன் பக்தர்களுக்கான தாக சாந்திக்காக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் போத்தல்களையும் வழங்கியிருந்தது.

அத்துடன் ஆலய வீதிகளிலும் யாழ்குடா நாட்டின் பல இடங்களிலுள்ள வீதியோரங்களிலும் ஆலயம் சென்று வரும் பக்தர்கள் தங்கி இளைப்பாறி செல்வதற்கும் தாகசாந்திக்கும் தாகசாந்தி நிலையங்களும் அமைக்கப்பட்டிருந்தன.

தேர்தொடங்கி இருப்பிடம் வரும்வரை வீதியில் கற்பூரம் எரிப்பதற்கு தடை செய்யப்பட்டிருந்தது. அத்துடன் தூக்குக்காவடிகள் என்பனவும் தேர் வெளிவீதியுலா தொடங்கி முடியும்வரை ஆலய வீதிக்கு வருவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்ததுடன் ஆலய வீதியில் ஒலி பெருக்கி (வெளியார்) பாவிப்பதும் தடை செய்யப்பட்டிருந்தது.

யாழ் மாநகர சபை நிர்வாகம் பக்தர்களினது வசதி கருதி ஆலய வீதிகளுக்கு சமீபமாக பல மலசல கூடங்களை அமைத்திருந்ததுடன், ஆங்காங்கே குடிதண்ணீர் நிரப்பப்பட்ட கொள்கலன்களையும் மக்களின் பாவனைக்கென வைத்திருந்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை பொலிஸாரும், இராணுவத்தினரும்கூட்டாக இணைந்து ஈடுபட்டிருந்தனர். சென்யோன் முதலுதவிப் படையினர் கே. செல்வரஞ்சன், யாழ் மாவட்ட இணைப்பாளர் தலைமையிலும் மக்கள் நலன்புரி சங்கத்தினர் எஸ். சதீஸ் தலைமையிலும், இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் எஸ். சாந்தா தலைமையிலும் தொண்டர் சேவைகளை ஆற்றியிருந்தனர்.

நல்லை ஆதீனம் உட்பட ஆலய சூழலில் உள்ள அன்னதான மடங்களிலும் ஆலயங்களிலும், தனியார் வீடுகளிலும் பக்தர்களுக்கு அன்னதான நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 Comments

  • haran
    haran

    புலிகளின் அழிவு இந்த மக்களால் எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருந்தது புலிகளே மக்களின் நிம்மதியை கலைத்திருந்தனர் என்பதற்கு இவைகள் எடுத்துக்காட்டு – புலிகள் மக்கள் மக்களின் விருப்பு வெறுப்புக்களை அறியமுயொத அறிவிலிகளாக இருந்துள்ளனர் மக்களுக்கு உள்ள தெவைகளை விட தமது புலிகளின் உறுப்பினர்களின் நலனில் அக்கறையை அதிகமாக்கி உரிமைகள் கோரும் என்ற அர்த்தத்ததை பாழடித்தனர்.

    Reply
  • B J Mariar
    B J Mariar

    இன்று புலிகள் இருந்திருந்தால் திருவிழாவையும் குழப்பி ஏனைய நல்ல நிகழ்வுகளையும் குழப்பி அதை நியாயப் படுத்த பொய் பிரசாரங்களை தனது வெளிநாட்டு உடகங்கள் மூலம் செய்து மக்களையும் குழப்பி நாட்டில் மக்களை தமிழ் ஈழம் என்ற போர்வையில் நிம்மதியாக வாழ விட்டிருக்க மாட்டர்கள்.

    விமானத்தில் இருந்து குண்டுகளை பார்த்த மக்களுக்கு பூக்களை பார்க்கும் பொழுது நிட்சியமாக மகிழ்ச்சியாகத் தான் இருக்கும்.

    நல்லூர் கந்தனும் மடு மாதாவும் இலங்கையில் உள்ள எல்லா மக்களுக்கும் விரைவில் மகிழ்ச்சியை கொடுக்க வேண்டுவோம்.

    Reply
  • மாயா
    மாயா

    மெதுவாகவாவது இறைவன் மக்களை யதார்த்த நிலைக்கு கொண்டு வர வேண்டும். தொடர்ந்து நடக்கும் அநியாய கைதுகளும் , துன்புறுத்தல்களும் முடிவுக்கு வந்து , அனைத்து மக்களும் அமைதியாக வாழும் நிலைவர அனைத்து கடவுள்களும் அருள் பாலிக்க வேண்டும். ஆட்சியாளர்கள் மற்றும் மக்கள் மனங்களில் மாற்றம் வரவேண்டும்.

    Reply
  • பல்லி
    பல்லி

    ஒரு நாளேனும் மக்கள் மகிழ்ச்சியாக இருக்க கடவுள் காரனமாக இருந்தாலும் கூட அதை பகுத்தறிவாளர்கள் கூட பாராட்டதானே வேண்டும்; மகிழ்ச்சி என்பதை எம்மக்கள் தேடும் இடத்தில் அல்லவா தொலைத்து விட்டனர்; தேரை கூட றோட்டில் ஓட விடஅனுமதி தரும் அரசு; இந்த வன்னிமக்களை அவர்களது தெருக்களிலாவது நடக்கவிட கந்தன் கருனை செய்யட்டும்;

    Reply
  • visuvan
    visuvan

    இதைவிட ஒரு அநியாயாம் எந்த நாட்டில் நடைபெறும்? அண்மையில் வன்னியில் உள்ள முகாம்களுக்கு சென்றுவரும் டாக்டரிடம் கதைக்க நேர்ந்தது! விமானத்தில் பூச்சொரிந்த அரசு அதை மிச்சப்படுத்தி அதை வன்னியல் அன்றாடம் அல்லலுறம் மக்களிற்கு உதவலாம் தானே! இன்று சிங்கள மக்களே பார்த்து இரங்கும் நிலையில் வன்னி மக்கள் உள்ளனர்! புலம் பெயர் மண்ணில் ஆட்றிகளுக்கும் ஆயுதங்களுக்கும் நாளொரு மேனிக்கு பணம் சேர்த புண்ணாக்குகள் இந்த வன்னி மக்களை கைவிட்டது போல் இலங்கை அரசும் இவர்களை பற்றி கவனிப்பதே கிடையாது! இது தான் அந்த டாக்டரின் ஆதங்கம் கூட!!!

    Reply
  • itam
    itam

    குண்டுமாரிபொழிந்த விமானங்கள் இவ்வாண்டு பூ மழை பொழிய நல்லூர் கந்தன் வீதி உலா!

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    புலத்தில் புலிப்பினாமிகளின் கோவில்களிலும் திருவிழாக்கள் மிக விமரிசையாக நடந்து கொண்டிருக்க, சில புலிப்பினாமி ஊடகங்கள் மடுத்திருப்பதித் திருவிழாவும், நல்லூர் கந்தன் திருவிழாவும் இவ்வளவு விமரிசையாக தற்போது தேவையா எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். காரணம் மடுவிலும், நல்லூரிலும் இப்படி 6 இலட்சங்களைத் தாண்டி மக்கள் கலந்து கொள்வார்கள் என்று இவர்கள் எதிர்பார்க்கவில்லை. 30 வருடங்களின் பின் அந்த மக்களின் முகங்களில் சந்தோசத்தைக் காண முடிந்தது. இந்த சந்தோசம் நிலைக்க இலங்கை அரசும் பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை தொடர்ந்தும் எடுக்க வேண்டும். குறிப்பாக வவுனியா அகதி முகாம் மக்களை அவர்களின் சொந்த இடங்களிலேயே குடியேற்ற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல் தமிழர்களுக்கான சுயமரியாதையுடன் வாழக்கூடிய ஒரு நியாயமான தீர்வையும் விரைந்து வைக்க முன் வரவேண்டும். இல்லையேல் தற்போது மக்கள் பெற்ற சந்தோச நிலை மாறி, மீண்டும் ஒரு பதட்டமான சூழ்நிலையே உருவாகும் நிலை தோன்றலாம். தற்போதுள்ள நிலையில் பந்து தற்போது அரசின் கைகளில்த் தானுள்ளது. எனியும் அரசு புலிகளைச் சாட்டியே காலத்தை கடத்த முடியாது.

    Reply
  • Prof Pecco
    Prof Pecco

    சனத்தை என்ன செய்ய சொல்றியல்
    சிங்கள அரசாங்த்தை நம்ப முடியவில்லை.
    சரி என்று தமிழரசுக் கட்சி கூட்டணி நம்பினா அந்த கோஸ்டியும் பேக்காட்டிப் போட்டுது.
    சரி வெள்ளை வேட்டி கோஸ்டி தான் அப்படி பெடியல் ஏதாவது செய்வாங்கள் என்று பார்த்த அவை செய்த அட்டகாசங்கள் தாங்கேலமப் போச்சு.
    அதுக்குள் தம்பி கொஞ்சம் பரவாயில்லை ஏதோ செய்யிறான் என்று கட்டாயம் ஒரு முடிவுக்கு கொண்டு வருவான் என நம்பிச்சு. ஆனா முள்ளிவாய்காளில கொண்டு வந்து வேள்விக்கு நேர்ந்த மாதிரியெல்லோ தம்பி விட்டுட்டார்.

    சரி தம்பி தான் அப்பிடி விட்டுட்டார் என்று புலத்தில இருக்கிற அறுநாக் கொடி உறவுகள் தொப்புள் கொடி உறவுகள் ஏதாவது செய்யும் என்று பார்த்தா அதகளும் இல்லை இல்லை உங்களை வேள்விக்கு தான் நேர்ந்தனாங்கள். உதுக்கு வெளில வந்த தெய்வ குற்றம். நாங்கள் வாய்க்கரிசி போட வணங்காமண் அனுப்புறம் என்டான்கள். சனத்தை புதைச்ச இடத்தில புல்லும் முளைச்சிட்டுது. இனி ஆட்டத் திவசத்துக்குத்தான் வணங்காமண் அரிசி போய்ச்சேரும்.

    இதுக்குப் பிறகு சனம் என்ன என்று மனிசரை நம்பும். கல்லையும் மரத்தையும் தான் நம்ப வேணும். அது ஒன்று தான் அந்தச் சனத்துக்கு இருக்கிற கவுன்சிலிங். இதை விளங்கிக் கொள்ள வேணும்.

    அப்ப புலியில பழி போட்டால் பொட்டர் விடார். இப்ப டக்ளசிட்ட பழிபோட்ட அவர் வெள்ளை வானிலை வந்திடுவார். மகிந்தவிட்ட பழிபோடுறது என்று யோசிச்சாலே மோட்டர் சைக்கிளில ஆக்கள் வருயினமாம். அப்ப கடவுளிலதானே பழி போடவேணும். அவர் மயில் சேவல் என்று வந்து சேர்ந்து உந்த ஈட்டியால ஒன்றும் செய்யேலாது கண்டியலோ. கடவுளிட்டை பழிப் போட்டுட்டு இருக்க வேண்டியது தான்.

    ஆனா ஒரு விசயம் கண்டியலோ தமிழ் தேசியத் தலைவரை தமிழ்க் கடவுள் முருகக் கடவுள் என்று ஆக்கள் சொல்லேக்கை எனக்கு விசயம் விளங்கேல்ல. ஆனா தலைவர் கோவணத்தோட போகேக்க தான் எனக்கு அந்தாலும் முருகக் கடவுள் என்றது தெரிஞ்சுது.

    நல்லூர்க் கந்தனுக்கு அரோகரா!!!

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //ஆனா ஒரு விசயம் கண்டியலோ தமிழ் தேசியத் தலைவரை தமிழ்க் கடவுள் முருகக் கடவுள் என்று ஆக்கள் சொல்லேக்கை எனக்கு விசயம் விளங்கேல்ல. ஆனா தலைவர் கோவணத்தோட போகேக்க தான் எனக்கு அந்தாலும் முருகக் கடவுள் என்றது தெரிஞ்சுது. – Prof Pecco //

    அப்ப நீங்கள்; யாரும் பெரிய “வண்டி”யோடை போய்ச் சேர்ந்தால் பிள்ளையார் ஆக்கிடுவீங்கள் போல.

    Reply
  • மாயா
    மாயா

    // கோவணத்தோட போகேக்க தான் எனக்கு அந்தாலும் முருகக் கடவுள் என்றது தெரிஞ்சுது.- Prof Pecco //

    எப்படியோ மக்கள் துரோகியாகியை முருகனாக்கிட்டியள். பரவாயில்லை. சந்தோஷமாக கும்பிடுங்கோ. ஆனால் மக்கள் இன்னமும் பாவம். இன்னமும் உயிரை கையில பிடிச்சுக் கொண்டு வாழுதுகள்.

    சனங்கள் நிம்மதியை , இன்னமும் கெடுக்கிறதில கண்ணாயிருக்கிறது புலத்து புலிகளும் , வாலுகளும்தான். இங்கயிருந்து இவங்கள் கொக்கரிக்கும் போது அங்க உள்ள அப்பாவிகள் துன்பப்படுகிறாங்கள்.

    நல்லூரான் ஏகப்பட்டவர்களின்ட தாலிகளை பறிச்சிட்டாராம். என்ன யோசிக்கிறியள்? திருவிழாவில கள்ளர் அறுத்திட்டினமாம். எல்லா இடத்திலும் ஏதோ ஒரு வகையில தாலி அறுப்பு நடக்குது.

    சனம் செத்தால் என்ன? சுவிஸிலயும் விளையாட்டு போட்டி நடத்தி , கடை போட்டு காசு சேர்த்து பார்க்க வெள்ளோட்டம் விட்டிருக்கினம் புலிகள். சாவுக் கிராக்கிகள்?

    Reply