யாழ். மாவட்டத்தில் இருந்து ஏ-9 பாதையூடாக இலங்கை போக்குவரத்து சபைக்குரிய பஸ்களில் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளின் வசதி கருதி முன்பதிவு செய்து கொள்ளும் ஏற்பாடுகள் இன்று திங்கள் முதல் (17ம் திகதி) முன்னெடுக்கப்படவுள்ளன.
சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினது ஆலோசனைக்கு அமைவாக இன்று 17ம் திகதி முதல் மேற்படி முன்பதிவு நடவடி க்கைகள் யாழ். பஸ் தரிப்பு நிலையத்திலும் பருத்தித்துறை மற்றும் காரைநகர் இ. போ. ச. பஸ் சாலைகளிலும் இடம்பெறவுள்ளன.
இந்த நிலையில் ஏ – 9 பாதையூடாக பஸ் பயணங்களை மேற்கொள்பவர்கள் கட்டாயமாக முன்பதிவுகள் செய்து கொள்வது அவசியமாகும் என்பதுடன் அவசர பயணங்களை மேற்கொள்ள வேண்டியதாயின் சிவில் அலுவலகத்துடன் தொடர்புகொள்ள இயலும். முன்பதிவு செய்து கொள்வதற்காக ஒரு பதிவுக்கு பத்து ரூபா வீதம் அறவிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.