பன்றிக் காய்ச்சல் காரணமாக ஹஜ் கடமைக்கு புதிய கட்டுப்பாடு

haji.jpgஉலக நாடுகளில் பன்றிக் காய்ச்சல் பரவி வருவதால் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு வருகை தரும் யாத்திரிகர் தொடர்பில் சவூதி அரேபிய அரசாங்கம் புதிய அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது.

அதன்படி 12 வயதுக்குக் குறைவானவர்களும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் கர்ப்பிணித் தாய்மாரும் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்வது ஏற்றதாகும் என சவூதி அரேபிய அரசாங்கம் அறிவித்துள்ளதாக முஸ்லிம் சமய கலாசார திணைக்களப் பணிப்பாளர் வை. எல். எம். நவவி தெரிவித்தார்.

உலகின் பல்வேறு பகுதிகளிலும் பரவிவரும் புதிய இன்புலுவன்சா ஏ (எச்-1, என்-1) வைரஸ் காய்ச்சல் காரணமாகவே சவூதி அரேபிய சுகாதார அமைச்சு புதிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் இது கட்டுப்பாடோ தடையோ அல்ல எனவும் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

இது தவிர இருதய நோயாளிகள்,  சிறுநீரக கோளாறு உடையோர், நீரிளிவு நோயாளிகள் போன்றோரும் ஹஜ் கடமையை நிறைவேற்ற வருவதை தவிர்க்குமாறும் சவூதி அரேபியா அரசு அறிவித்துள்ளது. சவூதி அரேபிய அரசாங்கத்தின் புதிய அறிவுறுத்தல்கள் குறித்து இலங்கையிலுள்ள சகல ஹஜ் முகவர் நிலையங்களையும் அழைத்து அறிவூட்ட உள்ளதாகவும் நவவி கூறினார்.

இதேவேளை இந்த வருடம் சர்வதேச கடவுச் சீட்டு உள்ளவர்களுக்கு மாத்திரம் ஹஜ் யாத்திரிகை செல்ல அனுமதி வழங்கவும் சவூதி அரேபியா அரசு தீர்மானித்துள்ளது. முன்னர் மத்திய கிழக்கு கடவுச்சீட்டு மற்றும் ஹஜ்ஜுக்கான விசேட கடவுச் சீட்டு உள்ளவர்களுக்கும் ஹஜ் யாத்திரை செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • BC
    BC

    //இது தவிர இருதய நோயாளிகள், சிறுநீரக கோளாறு உடையோர், நீரிளிவு நோயாளிகள் போன்றோரும் ஹஜ் கடமையை நிறைவேற்ற வருவதை தவிர்க்குமாறும் சவூதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.//

    இது நடக்காது. எங்கள் ஆட்கள் நோய்கள் அதிகரிக்க தான் கோவிலுக்கு சேர்ச்சுக்கும் போவதை மேலும் அதிகரிக்கிறார்கள்.

    Reply