உலக பட்மிண்டன் சாம்பியன் போட்டிகளின் கால் இறுதிக்கு தகுதிபெற்றுள்ள முதலாவது இந்தியப் பெண் என்ற பெருமையை சைனா நெஃவால் என்ற வீராங்கனை பெற்றிருக்கிறார்.
19 வயதான இந்த இந்திய யுவதி, வட இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவராவார். பல்கேரிய நாட்டுப் பெண்ணுடன் விளையாடி வெற்றிபெற்ற அவர் கால் இறுதியை எட்டியிருக்கிறார். சீன நாட்டின் வாங் லின்னுடன் இனி அவர் போட்டியிடவுள்ளார்