டெங்கு நுளம்புகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் பீ. ரி. ஐ. பக்aரியா நுண்ணங்கிகளை இலங்கை உபயோகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பது பற்றி நடத்தப்பட்ட ஆய்வுகளின் அறிக்கை நேற்று சுகாதார அமைச்சுக்கு கையளிக்கப்பட்டது.
கியூபாவிலிருந்து வந்த நிபுணத்துவ குழுவினர் நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில் இறுதி அறிக்கையை நேற்று சுகாதார அமைச்சில் கையளித்தனர்.
சுகாதார அமைச்சின் பொதுச் சுகாதார பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபால, சுகாதார அமைச்சின் செயலர் டொக்டர் கஹந்த லியனகேயிடம் நேற்று கையளித்தார்.
சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் விசேட அழைப்பை ஏற்று டெங்கு நுளம்பு ஒழிப்புக்கான கியூபா பீ.ரி.ஐ. (B.T.I) பக்aரியா நுண்ணங்கிகளை உபயோகிப்பதற்குரிய சாத்தியக் கூறுகள் பற்றி ஆராய்வதற்கு கியூபா விலிருந்து இரண்டு நிபுணர்கள் வருகை தந்தி ருந்தனர்.
இவர்கள் இருவரும் மேற்படி நுண்ணங்கிகளை உபயோகிப்பது தொடர்பாக பல இடங்களில் தமது ஆய்வுகளை நடத்தினர். இதன்படி, அம் பாந்தோட்டை, கண்டி, கொழும்பு மாவட்டங் களிலும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இதனையடுத்து நுண்ணங்கிகளை பயன்படுத் தக்கூடிய சாத்தியக்கூறுகள் மற்றும் சிபாரிசுகள் அடங்கிய அறிக்கை தயாரிக்கப்பட்டு நேற்று கையளிக்கப்பட்டது.
இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சிபாரிசுகள் தொடர்பாக ஆராய்ந்த பின்னர் அதனை நடைமுறைப்படுத்துவது என முடிவு செய்யப் பட்டுள்ளது. மேற்படி சிபாரிசுகளடங்கிய அறிக்கை அடுத்த வாரம் சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் ஒப்படைக்கப்படும்.
வெளிநாட்டில் நடபெறும் இரண்டு மாநாடுகளில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ள அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா எதிர்வரும் 19ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளார். அதன்பின்னரே அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.