நியூஸி லாந்துடனான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியில் முத்தையா முரளிதரன் இணைக்கப்பட்டுள்ளார். அத்துடன் முரளிக்கு பதிலாக பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரில் விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் மற்றும் அஜந்த மெண்டிஸ் ஆகியோருக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது.
இது தவிர, பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக விளையாடாத விக்கெட் காப்பாளர் பிரஸன்ன ஜயவர்தன மற்றும் காயத்தினால் அவதிப்பட்டு வந்த டி.எம். டில்ஷான் ஆகியோரும் டெஸ்ட் அணிக்கு திரும்புகின்றனர். இதில் பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம்பிடித்த சுரேவ் ரன்திவ், சுரங்க லக்மால் மற்றும் கௌஷல்ய சில்வா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 18 ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ளது.
அணி விபரம்
குமார் சங்கக்கார (தலைவர்), மலிந்த வர்ணபுர, தரங்க பரணவிதான, மஹேல ஜயவர்தன, திலான் சமரவீர, திலகரத்ன டில்ஷா, அன்ஜலோ மத்தியூஸ், சாமர கபுகெதர, முத்தையா முரளிதரன், அஜந்த மெண்டிஸ், திலான் துஷார, நுவன் குலசேகர, தம்மிக்க பிரசாத், பிரஸன்ன ஜயவர்தன (வி.கா.), ரங்கன ஹேரத்.