இந்தோனேஷியாவில் சட்டவிரோத குடியேற்றம் : இலங்கையர் நாடு திரும்புவர்

indonesia1111.jpgஇந்தோனே ஷியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் நாடு திரும்ப உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த இலங்கையர்கள் சிலரை அந்நாட்டுக் காவல்துறையினர் கைது செய்து தடுத்து வைத்திருந்தனர்.

இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்ட எட்டு சட்டவிரோதக் குடியேற்றக்காரர்களே இவ்வாறு இலங்கைக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அதேவேளை, இந்தோனேஷியாவின் ஆச்சே தீவுகளில் கைது செய்யப்பட்ட 55 இலங்கைத் தமிழர்கள் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • சாந்தன்
    சாந்தன்

    இந்தோனேசியா செய்திக்கு அமெரிக்க ராஜாங்கத்திணைக்கள இலச்சினை எதற்கு? தேசம் ஏதாவது செய்தி கூற விளைகிறதா வாசகர்களுக்கு?

    Reply
  • அருட்சல்வன் வி,
    அருட்சல்வன் வி,

    Sorry சாந்தன்
    தவறுக்கு வருந்துகிறேன் -படம் மாற்றப்பட்டு விட்டது.-Okay

    Reply