நான்கு படகு இயந்திரங்கள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
புதுக்குடியிருப்பு, அம்பகாமம் பிரதேசங்களில் இராணுவத்தின் விஷேட அதிரடிப்படைப் பிரிவினர் மேற்கொண்ட தேடுதல்களின் போதே மேற்படி ஆயுதங்களை மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இராணுவத்தின் எட்டாவது அதிரடிப் படையினர் புதுக்குடியிருப்பின் ஐந்து பிரதேசங்களில்; தேடுதல்களை மேற்கொண்ட போது, ரி- 56 ரக துப்பாக்கி ரவைகள் 6 பெட்டிகள், தேசிய அடையாள அட்டைகள்- 29, ரெலோ அடையாள அட்டை- 01, புலிகளின் அடையாள அட்டை – 02, பல்வேறு வகையான துப்பாக்கி ரவைகள்-1.700, கையடக்க தொலைபேசிகள்- 07, இதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள், கைக்குண்டுகள்- 04 மற்றும் படகுகளுக்கும் பொருத்தப்படும் வெளிஇணைப்பு இயந்திரங்கள்- 04 என்பவற்றை படையினர் மீட்டெடுத்துள்ளனர்.
இதேவேளை அம்பகாமம் பிரதேசத்திலிருந்து ரி-56 ரக துப்பாக்கி ரவைகள்- 1.042, கைக்குண்டுகள்- 10 மற்றும் பெருந்தொகையான மோட்டார் குண்டுகளையும் மீட்டெடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.