இலங்கையின் தெற்கு மாகாண கவுன்சிலர் டேன்னி ஹிதித்தேதியாகே கொலை தொடர்பாக மதுஷா லட்சுமணன் என்பவரை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் ஜனாதிபதி ராஜபக்சவின் சொந்த ஊரான அங்குனாகோலபெலீசாவில் மனித வெடிகுண்டாக செயல்பட்டு ராஜபக்சவை கொல்ல முயன்றது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்துஇ லட்சுமணனை விசாரணைக்காக கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கை அரசு நீதிமன்றத்தில் விசேஷ மனுதாக்கல் செய்துள்ளது.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிவான் எதிர்வரும் 17-ந்தேதி லட்சுமணனை கோர்ட்டில் ஆஜர் செய்யும்படியும்இ அதன் பின் அவரை பொலிஸ் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்கலாம் என்றும் உத்தரவிட்டார்.
இது குறித்து மூத்த சட்டத்தரணி திலீபா பெய்ரிஸ் நீதிமன்றில் கூறுகையில்இ மஹிந்த ராஜபக்சவை கொல்வதற்காக ஜனாதிபதியின் ஊரில் உள்ள ஒருவர் உதவியுடன் இந்த சதித்திட்டத்தை நிறைவேற்ற விடுதலைப்புலிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு லட்சுமணன் செயல்பட்டார் என்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது’ என்று தெரிவித்தார்.