ஐக்கிய தேசியக் கட்சி மிகவும் வேகமாக பிரதேசக் கட்சியின் அளவுக்கு ஒரு சிறிய கட்சியாக மாறி வருகிறது என தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாபா தெரிவித்தார்.
அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த தோல்விகள் மூலம் இது புலனாகிறது என அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தேர்தலின் போது யாழ்ப்பாண மக்கள் வாக்களித்திருந்தால் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றி பெற்றிருக்கும் என அவர்கள் தெரிவிக்கின்றார்கள். அப்படிக் கூறிய அவர்களுக்கு நடந்து முடிந்த யாழ்ப்பாண மா நகரசபைத் தேர்தலில் 83 வாக்குகளே கிடைத்துள்ளன
இந்தத் தோல்விகளையும் பெற்றுவரும் வாக்குகளையும் கவனித்தில் கொள்ளும் போது வெகு விரைவில் ஐக்கிய தேசியக் கட்சி ஒரு சிறிய கட்சியாக ஒரு பிரதேசக் கட்சியாக மாறிவிடும் என்பதை திட்டவட்டமாகக் கூறமுடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.