![]()
விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் செல்வராஜா பத்மநாதன் மலேசியாவில் எவ்வாறு தடுத்து வைக்கப்பட்டு, இலங்கைக்கு கொண்டு சென்றமை தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டுமென புலிகளின் சட்ட ஆலோசகர் விஸ்வநாதன் ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். செல்வராஜா பத்மநாதன் தொடர்பான விபரத்தை மலேசியா வெளியிட வேண்டுமென்றும் அவர் கேட்டுள்ளதாக ஏ.எவ்.பி. செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
செல்வராஜா பத்மநாதன் கோலாலம்பூரில் புதன்கிழமை கைது செய்யப்பட்டு பாங்கொக் ஊடாக இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தாய்லாந்து அரசாங்கம் தெரிவித்திருந்தது. இந்த விடயம் குறித்து மலேசியரசு எந்தத் தகவலையும் கொண்டிருக்காவிடின் முழு விடயம் தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டுமென நாம் வலியுறுத்துகிறோம் என்று ருத்திரகுமாரன் கூறியுள்ளார்.
Niroshan
VP இருக்கிறாரா இல்லையா எனும்போது தான் தான் புலிகளின் தலைவர் என்று KP அறிவித்தார். இப்ப KP இருப்பரோ இல்லையோ என்னும் பொழுது, ருத்திரகுமாரன் புலிகளின் புதிய தலைவர் தான் என்று அறிவிப்பரோ என்று தோன்றுகிறது
Rao
Cyanide (Kuppy)
Brain washed youngsters and innocent children were forced to used the Kuppies
What happened to VP and KP’S Kuppies????
பார்த்திபன்
உருத்திரகுமார் இதற்கெல்லாம் விசாரணை நடாத்துவதை விட, நீங்களும் ஆசிய நாடொன்றுக்கு சென்று சில நாட்கள் தங்கியிருங்கள். அப்போது தானாகவே உங்களுக்கு எல்லாம் புரியும்படி இலங்கை புலனாய்வுப் பிரிவினர் செய்து விடுவார்கள். அப்போது உங்களுக்கும் எல்லாம் தெளிவாகப் புரிந்துவிடும்.
chandran.raja
அத்துடன்….ஆயுதத்தை மெளனிக்க செய்த மொடோன் புலிகளுக்கு ஏவுகணைகளையோ யுத்தசம்பந்த உபகரணங்களையோ வாங்கிற தேவை இனிகாலங்களில் இல்லவே இல்லை.வட்டிவிகிதங்கள் முதல்லீடுகள் பற்றிய விபரங்களையும் கேட்டு வைக்கவும்.தலைமறைவாகப் போனவர்கள் விபரங்களையும் பதிவு செய்யவும்.
நான் சொல்வது மாஜீபணப்பொறுப்பாளர். சர்வதேச குற்றபுலனாய்வு உதவியை நாடும் பொழுது இலகுவானது. இன்னுமொரு விஷயத்தை நீங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும். அரசியல் இல்லாத அரசியலை செய்யப் புறப்பட்டுத்தான் முப்பதுவருடங்களாக முப்பதியாயிரம் மீனவக்குடும்பங்கள் வலைகள் படகுகள் உடமைகளை இழந்து நிர்கதியாகவுள்ளார்கள். நாலுலட்சம் தமிழ்மக்கள் உங்களால் தான் சிறைபிடிக்கப்பட்டார்கள். காவு கொடுத்தது போக மிகுதி மூன்று லட்சமாக மாறி அவப்பெயருடன் இன்னொரு சிறையில் காலம்கடத்தி வருகிறார்கள். இவர்கள்களும் உங்கள் பொருளாதார உதவிகளை எதிர்பார்கிறார்கள். அரசியல் உபதேசங்களை அல்ல என்பதை மறக்கவேண்டாம்.