பிலிப்பைன்ஸ், தாய்வான், சீனா ஆகிய நாடுகளில் கடந்த சில நாட்களாக வீசிய மொராக்கோ என்ற சூறாவளி காரணமாக தாய்வானில் உள்ள ஷியோலின் என்ற மலைக் கிராமம் முழுவதும் மண்ணில் புதைந்ததுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை அங்கு மக்கள் அயர்ந்து தூங்கிகொண்டிருந்த போது திடீரென அக்கிராமமே மண்ணில் புதைந்துள்ளது.
இக்கிராமத்தில் 200 வீடுகளில் தங்கியிருந்த 600 பேரும் பலியானார்கள். தகவல் அறிந்ததும் அதிகாரிகளும், மீட்புக் குழுவினரும் விரைந்து சென்று சடலங்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.