வடக்கின் வசந்தம் செயலணியின் மீளாய்வுக் கூட்டம் யாழ் பொதுசன நூலகத்தில் இன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் சமூகசேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொள்வர்.
யாழ்ப்பாணத்தில் தற்போது நடைமுறையிலுள்ள பயணப்பாதுகாப்பு அனுமதி வழங்கும் நடைமுறையை இலகுபடுத்துவது பற்றி இக்கூட்டத்தில் கலந்துரையாடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.