புனித மடு தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. இம்முறைத் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் பயங்கரவாதம் ஒழிந்த பின்னர் நடத்தப்படும் முதலாவது மடுத்திருவிழா இதுவாகும்.
இன்று ஆரம்பமாகும் மடுத்திருவிழா தொடர்ந்து 16ஆந் திகதி வரை நடைபெறும். இன்றைய முதலாவது வழிபாடு முற்பகல் 11.00 மணியளவில் நடைபெற்றது. மற்றுமொரு வழிபாடு மாலை 4.30 மணிக்கு நடைபெறும். வழமைபோன்று சகல வழிபாடுகளுடன் திருவிழா நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக ஆலய பரிபாலகர் அருட்திரு. ப்ரெட்டி டெஸ்மன் க்ளார்க் தெரிவித்துள்ளார்.
மடுத் திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க பொலிஸார் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் எனினும் யாத்திரிகர்கள் எவரும் ஆலயத்தில் எதிர்வரும் 11ஆந்திகதி வரை தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் 12ஆந் திகதி முதல் திருவிழா நிறைவுறும் வரை யாத்திரிகர்கள் ஆலயத்தில் தங்கயிருக்க அனுமதிக்கப்படுவர் எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பார்த்திபன்
தமது சொந்த நலன்களுக்காக மக்களைச் சாய்த்துக் கொண்டு போனவர்கள், மடுமாதாவையு்ம் தேவாலயத்தை விட்டு அகற்றினார்கள். ஆனால் மாதாவின் புண்ணியமோ என்னவோ கடத்தியவர்களே திரும்பவும் மாதாவை மீள்குடியேற்றம் செய்ய வேண்டிய நிலைமை வந்தது. 30 வருடங்கள் கடந்து இன்று நிம்மதியாக சகல இனமக்களும் மாதாவை உள்ளன்போடு வழிபட வழியும் பிறந்திருக்கின்றது. இனி அனைத்து மக்களுக்கும் நிம்மதியான வாழ்வு கிடைத்திட மாதாவும் அருள் பாலிக்க வேண்டும்.
Murali
என்ன தான் கருத்து வேறு பாடுகள் இருந்தாலும்,
வெளி நாடுகளில் எதிர் மறையாக கூச்சலிட்டாலும்
நாட்டில் மக்களுடைய வாழ்க்கை மெல்ல மெல்ல முப்பது வருடங்களுக்கு பின்பு வழமைக்கு திரும்புவது ஒரு ஆறுதலுடன் மகிழ்ச்சியான விடயமே
நண்பன்
இப்படியாவது இன நல்லிணக்கங்கள் உருவாகி மக்கள் நிம்தியாக வாழ வேண்டும்.
சுனாமி காலத்தில் அது கண்ணில் தெரிந்தது. அதை சுனாமி போலவே அழித்தமை வேதனையை தருகிறது.