பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதை புனரமைப்பு திட்டத்திற்கென இந்திய அரசு 117 மில்லியன் ரூபாவை நிதியுதவியாக வழங்கியுள்ளது. இரண்டாவது தவணைப் பணமாக 117 மில்லியன் ரூபாவுக்கான காசோலையை இந்திய அரசு, இலங்கைக்கு வழங்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிடம் இந்திய உயர் ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் இதற்கான காசோலையை வழங்கிவைத்தார். இந்த நிகழ்வில் இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரதீப் சிங்கும் கலந்துகொண்டார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவை மேலும் பலப்படுத்தும் வகையில் இந்த நிதியுதவி அமைந்துள்ளது.