தமிழ்ப் பேசும் மக்களின் மிகுந்த அபிமானத்துக்குரிய தேசிய நாளிதழான வீரகேசரி தனது 79 ஆண்டு கால ஊடக சேவையைப் பூர்த்திசெய்து இன்று 80 ஆவது ஆண்டில் காலடி எடுத்துவைத்துள்ளது. இது உலகெங்கும் பரந்து வாழும் ‘கேசரி’ அபிமானிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
1930 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி-இதே நாளில் ஆரம்பிக்கப்பட்டது தான் வீரகேசரி நாளிதழ். ஊடகத்துறையில் மிகவும் ஆர்வம் பெற்று விளங்கிய தென்னிந்தியாவைச் சேர்ந்த சுப்பிரமணியச் செட்டியார் இதனை ஆரம்பித்து வைத்தார்.
பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் இலங்கையில் நிலவிய பல்வேறு கஷ்டங்கள், நெருக்கடிகள் என்பவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் நோக்கத்திலும் சமுதாயத்தில் நிலவும் சீர்கேடுகளைக் களைந்து சீரியதோர் சமுதாயத்தை உருவாக்க வேண்டுமென்ற தீர்க்கத்தரிசனத்துடனும் ஆரம்பிக்கப்பட்டதே வீரகேசரி நாளிதழாகும்.
மக்களுக்கு உண்மையான தகவல்களை நடுநிலை தவறாது கொடுக்க வேண்டும். சமுதாயத்தின் நீதி, நியாயங்களுக்காகப் போராட வேண்டும், குறிப்பாகத் தமிழ்ப் பேசும் சமூகங்களின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்ட தன்னாலான பங்களிப்பை ஆற்ற வேண்டும், அதேவேளை பத்திரிகை தர்மத்தைப் பேணிக்காக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை அடிநாதமாகக் கொண்டு உருவான வீரகேசரி இன்றும் அதன் பணியை சிரமேற்கொண்டு முன்னெடுத்து வருகிறது.
பார்த்திபன்
நீண்ட பாரம்பரியமும், பல உன்னத ஊடகவியலாளர்களை உருவாக்கிய பெருமையையும் கொண்டது வீரகேசரி. தனது 80 வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் வீரகேசரி தொடர்ந்தும் ஊடக தர்மத்தைப் பேணிக்காத்து மக்கள் மனதில் தொடர்ந்தும் இடம் பிடிக்க வேண்டுமென்று மனதார வாழ்த்துகின்றேன்.
Mugunthan
வீரகேசரி ஒரு வரலாறு தமிழர் வாழ்வில் ஆழப்பதிந்த வரலாறு தனது வரலாற்றில் எம்மை எல்லாம் உற்சாகப்படுத்தி எம்மை சமூகத்தில் ஈடுபடுத்திய வரலாற்றில் வீரகேசரிக்கு பாரிய பங்குண்டு வீரகேசரி யாரால் எந்த சமூகத்தவனால் உருவாக்கப்பட்டது என்ற தேடலுக்கு நேரம் கிடைத்ததில்லை ஆனால் வீரகேசரி வாசிக்காமல் அன்றய நாள் இருட்டுவதும் ஏதே ஏற்க முடியாதிருந்ததும் இளமைப்பருவ ஞாபகம் பலதடவைகள் வந்து போனது அடுத்த நாள் என்றாலும் வாசித்து விடவேண்டும் என்ற உந்துதல் இருந்ததும் இன்றும் 30 வருடங்களின் பின்பும் நேற்றுப்போல் இருக்கிறது. இன்றும் எமது எழுத்துக்கள் பேச்சுக்களில் வீரகேசரி வருகிறது எமது சாதாரணமானவர்களில் வாழ்வில் ஆழப்பதிந்த வீரகேசரி பல ஆயிரம் வருடங்கள் வாழ்ந்திட வாழ்த்துகிறேன்.