இலங்கையில் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு மீண்டும் தமிழகத்தின் நிவாரணப் பொருட்கள்

srilanka-refugees.jpgஇலங் கையில் இடம் பெயர்ந்த தமிழர்களுக்கென தமிழக அரசு திரட்டியுள்ள நிவாரணப்பொருட்கள் நான்காவது தவணையாக இலங்கைக்கு அனுப்பப்படவிருக்கிறது. சுமார் 15 கோடி மதிப்புள்ள அப்பொருட்கள் ஏற்றப்பட்ட எம்.சி.பி.ஆம்ஸ்டர்டாம் என்ற கப்பல் வியாழக்கிழமை சென்னைத்துறைமுகத்திலிருந்து புறப்படும் என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் நிர்வாக இயக்குநர் வீர ஷண்முகமணி  செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இப்பொருட்களை கொழும்பில் இறக்குவதற்குத் தேவையான அனுமதி இலங்கை அரசிடமிருந்து வராத சூழலில் நிவாரணப் பொருட்கள் அடங்கிய 100 சரக்குப் பெட்டகங்கள் சென்னை துறைமுகத்தில் கடந்த சில நாட்களாக சென்னைத் துறைமுகத்தில் தேங்கிக்கிடப்பதாக சில பத்திரிகைச் செய்திகள் தெரிவித்தன.

நிவாரணப்பொருட்களை விநியோகிப்பது யார் என்ற சிக்கலின் காரணமாகவே தாமதமேற்பட்டதாகவும், இப்பொறுப்பு இப்போது சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடமிருந்து ஐக்கிய நாடுகள் அவையின் மேற்பார்வைக்கு மாற்றப்பட்டுவிட்டதால் அச்சிக்கலும் தீர்க்கப்பட்டுவிட்டது. எனவே கப்பலில் சரக்குக்கள் ஏற்றப்பட்டு கொழும்பிற்கு அனுப்பப்படும் என்று தமிழக அரசு அதிகாரிகள் கூறினர்.

இலங்கையில் போர் உக்கிரமடைந்த நேரத்தில் இடம் பெயர்ந்தோருக்காக நிவாரணப்பொருட்கள் திரட்டப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார். கடந்த ஆண்டு நவம்பர் 13 தொடங்கி இதுவரை மூன்று தவணைகளாக 23.52 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன்.

இப்போது அனுப்பிவைக்கப்படும் பொருட்கள் ஆகஸ்ட் 8 ஆம் நாள் கொழும்பு சென்றடையும் என்றும், பிறகு அவற்றை அங்குள்ள இந்தியத் தூதரகம் பெற்றுக்கொண்டு ஐக்கிய நாடுகள் நிறுவனம் மூலம் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்க்கு வழங்க நடவடிக்கைகள் எடுக்கும் என்றும் தமிழக அரசின் செய்திக்குறிப்பும் கூறுகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    தமிழகம் அனுப்பும் நிவாரணம் இம்முறை தான், புலிகள் எடுத்தது போக மிகுதி மக்களுக்குச் சென்றடைந்த நிலை மாறி, நேரடியாகவே மக்களைச் சென்றடையப் போகின்றது. பொருட்களை தொடர்ந்து அனுப்பி வைத்துதவும் தமிழக அரசிற்கும், தமிழக மக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

    Reply