வயலில் வல்லாரை பிடுங்கிக் கொண்டிருந்த மூன்று சிறுமிகள் மீது திடீரென வந்த குளவிகள் கொட்டிய சம்பவம் செவ்வாய்க்கிழமை காலி போதள பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் ஒரு சிறுமி மரணமானார். இரு சிறுமிகள் படுகாயமடைந்து காலி கராப்பிட்டிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அருகில் உள்ள மரத்தில் குளவிக்கூடு ஒன்று இருப்பதாகவும் அந்தக் குளவிகளே சிறுமிகளைக் கொட்டியதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.