இந்த ஆண்டின் மூன்றாவது கிரகணமாக இன்று பகுதி சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை இரண்டு கிரகணங்கள் ஏற்பட்டுள்ளன. முதலில் சந்திர கிரகணம் ஏற்பட்டது. இதையடுத்து சமீபத்தில் முழு சூரிய கிரகணம் ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று பகுதி சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது. இருப்பினும் இன்றைய சந்திர கிரகணத்தில் பெரிய அளவில் விசேஷம் எதுவும் இருக்காது என வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய கிரகணத்தின்போது, பூமியின் நிழலின் ஒரு பாதி, நிலவின் மீது விழும். கடந்த ஜூலை 7ம் தேதி நடந்த கிரகணத்தைப் போன்றதுதான் இது. இந்த கிரகணத்தின்போது நிலவின் தோற்றத்தி்ல் எந்த மாற்றமும் இருக்காது.
சென்னையில் இன்றைய சந்திர கிரகணம் அதிகாலையில் ஏற்படும். இது வெறும் கண்களுக்குத் தெரியாது. இன்று அதிகாலை 4.34 மணிக்குத் தொடங்கி 7.44 மணிக்கு இந்த சந்திர கிரகணம் முடிவடையும். அடுத்த சந்திர கிரகணம் டிசம்பர் 31ம் தேதி நடைபெறும். அதுவும் பாதி சந்திர கிரகணமாகவே இருக்கும்.