ஈராக் கிலிருந்து தமது நாட்டின் நிலப்பகுதிக்குள் கடந்த வெள்ளிக்கிழமை நுழைந்த மூன்று அமெரிக்கர்களை தடுத்து வைத்துள்ளதை இரான் உறுதி செய்துள்ளது.
தமது அண்டை நாடான இராக்கிலிருந்து இரானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் வடக்கு எல்லை நகரமான மரிவானுக்கு அருகில் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டின் பிராந்திய அதிகாரி தெரிவித்தார்.
அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு்ள்ளதாகவும், சுற்றுலாப் பயணிகளா என்பது அறியப்படவில்லையெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இராக்கின் குர்டிஸ்டான் பகுதியில் மலையேறிக்கொண்டிருந்த போது தெளிவாக வரையறுக்கப்படாத எல்லைப்பகுதியில் இவர்கள் மூவரும் தற்செயலாக வழிதவறிச் சென்றுள்ளதாக அவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இவர்களை கூடிய விரைவில் திருப்பியனுப்புமாறு அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலரி கிளிண்டன் இரானைக் கேட்டுக்கொண்டுள்ளார்.