வவுனியா தேக்கம்காடு பொது விளையாட்டு மைதானத்திலிருந்த வாகனச் சோதனை நிலையம் அகற்றப்பட்டுள்ளது. இதேநேரம், வவுனியாவிலிருந்து மதவாச்சி செல்லும் வாகனங்கள் ஈரற்பெரியகுளத்திலுள்ள சோதனைச் சாவடியில் வழமையான சோதனை நடவடிக்கையின் பின்னர் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்படுமென பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் ஒரு வருட காலம் இந்த வாகனச் சோதனை நிலையம் செயல்பட்டது. கொழும்பிற்கு வாகனங்கள் மூலம் வெடிபொருட்கள் கடத்திச் செல்லப்படுவதாகக் கூறியே வாகனங்களைச் சோதனையிடுவதற்காக பிரத்தியேக வாகனச் சோதனை நிலையம் அமைக்கப்பட்டது.
யுத்தம் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து இந்தச் சோதனை நிலையம் அகற்றப்பட்டுள்ளது.